ஜெனீவாவிற்கு விஜயம் செய்த அரசாங்கப் பிரதிநிதிகளுக்காக செலவிடப்பட்டுள்ள தொகை

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜெனீவா விஜயம் செய்த அரசாங்கப் பிரதிநிதிகளுக்காக இருபது மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த பிரதிநிதிகள் மனித உரிமைப் பேரவைக்கு எதிரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைப் பிரதிநிதிகளுக்கான தங்குமிட வசதிகளை ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஜெனீவாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கைப் பிரதிநிதிகளுக்கு விசேட கொடுப்பனவு தொகையொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவா விஜயத்தின் பின்னர் வெளிநாட்டு தூதுவர்களுக்கு பாரிய பொருட் செலவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

Latest Offers