கட்டார் உயர் குழுவினருக்கும் இராஜாங்க அமைச்சருக்குமிடையில் சந்திப்பு

Report Print Navoj in அரசியல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் உயர் குழுவினர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் உள்ளூராட்சி முறை பற்றி இராஜாங்க அமைச்சரால் கட்டார் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அதற்கான நற்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம். றிஸ்மி, தேசிய சூரா சபை பொதுச் செயலாளர், அஷ்ஷெய்க் இனாமுல்லா மஸீஹூத்தீன், கட்டார் அரச உயர் அதிகாரிகள், கட்டார் நாட்டின் மாநகர சபைகளின் முதல்வர்கள், இலங்கையிலுள்ள கட்டார் நாட்டின் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கட்டார் உயர் குழுவினர் இலங்கையின் உள்ளூராட்சி முறை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers