சிறைக்குச் செல்ல போகும் கோத்தபாய!

Report Print Nivetha in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முன்னதாகவே சிறைக்குச் செல்ல நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாயவிற்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி வழக்குகளை பார்த்தால் சிறைக்குச் செல்வார் என்றே நான் கருதுகின்றேன்.

கோத்தபாய ராஜபக்ச இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பார் என்பதே தமது நிலைப்பாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிட வேண்டுமென தாம் கருதுவதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச தீவிரம் காட்டி வருகின்றார். அதற்காக அமெரிக்க குடியுரிமையை கூட கைவிட தயாராகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers