அமைச்சரொருவருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதம்! பதவி விலகுமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சாரசபை பாவனையாளர்களுக்கு முன்கூட்டியே மின்சார தடங்கல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்று கூறி பொது பயன்பாட்டு ஆணைக்குழு, நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளது.

எனினும் அரசாங்க நிறுவனம் ஒன்றுக்கு எதிராக மற்றுமொரு அரசாங்க நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தமை தொடர்பில் ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தின்போது விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவருக்கும், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தனிக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்காக இன்று அமைச்சர் கருணாநாயக்க, இலங்கை மின்சாரசபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers