பொய் வாக்குறுதிகளால் இந்த அரசாங்கம் ஆட்சி செய்கின்றது : நாமல்

Report Print Gokulan Gokulan in அரசியல்

பொய் வாக்குறுதிகளால் இந்த அரசாங்கம் ஆட்சி செய்யும்போது வரிச் சுமை தாங்காது இந்நாட்டு மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் அதே பொய்களை கூறியே ஆட்சியில் இருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் பொய்களைக் கூறியே ஆட்சிக்கு வந்தது.

இன்று இந்த அரசாங்கம் ஆட்சியமைத்து 4வருடங்கள் ஆகின்ற நிலையில், ஆட்சிக்கு வந்த போது வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமாக மாற்றுவதாகவும் பல பில்லியன் டொலர்களை முதலீடாகக் கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

ஆனால் இன்று 3.1 சதவீதமாகவே பொருளாதார வளர்ச்சி காணப்படுவதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்திலிருந்து முதலீட்டாளர்கள் வருகின்றார்கள் இவர்கள் பில்லியன்களை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளனரென, அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆனால், பெல்ஜியத்திலிருந்து மூதலீட்டாளர்களும் வரவில்லை. வொக்சகன் நிறுவனத்தை இலங்கையில் அமைக்கவும் இல்லை.

பல்கலைக்கழக அனுமதிகள் குறைந்து விட்டன என்றும் கூறியுள்ளார்.

Latest Offers