நிலையான அமைத்திக்கு நீதியும் பொறுப்புக் கூறலும் முக்கியம்! இலங்கையை வலியுறுத்துகிறது பிரித்தானியா

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி சாத்தியப்படாது என பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர்,

ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், இலங்கை அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக, சிறப்பான வேலைகளை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியானது. குறைந்தபட்சம், பிரித்தானியாவில் வாழும் இலங்கை சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

எனினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது என்றார்.

Latest Offers