வரலாற்றில் மிக மோசமான மின்வெட்டை இலங்கை ஏன் சந்தித்திருக்கிறது?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இந்த அரசாங்கத்திடம் மின்சார விநியோகம் தொடர்பான முறையான திட்டமிடல் இல்லாததன் காரணம் எதுவும் இல்லை என்பதால் நாட்டு மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

மின்சார துண்டிப்புக்கான காரணம் நீர்மட்ட வீழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கத்திடம் மின்சார விநியோகம் தொடர்பான முறையான திட்டமிடல் இல்லாததன் காரணம் எதுவும் இல்லை. அதனால் மின்வெட்டு அதிகமாகிறது.

தற்போது மின்சார துண்டிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிறு வர்த்தக முயற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலைமைக்கு நீர்நிலைகளில் போதிய நீர் இன்மையே காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. காலத்துக்கு ஏற்ப மின்சார விநியோகத்தை முகாமை செய்வதற்கான திட்டமிடல் எதுவும் இல்லாமையே இதற்கு காரணம் என்றார்.

Latest Offers