மகிந்த ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்பளிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால், வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடுநிலை வகிக்கும் என அந்த கட்சியின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், அடுத்த இரண்டு தினங்கள் மிகவும் முக்கியமானது எனவும் எந்த பயனும் இல்லாத பேச்சுவார்த்தைக்கு பதிலாக தீர்க்கமான முடிவை எடுக்ககும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், தற்போது மகிந்த ராஜபக்சவின் கைகளில் அகப்பை இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றனர் என்று கடந்த காலங்களில் சுமத்திய குற்றச்சாட்டுகளின் உண்மையையும் பொய்யையும் அறிந்துக்கொள்ள சிறந்த சந்தர்ப்பம் இது எனவும் அந்த முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சம்பந்தமான தீர்மானத்தை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி சிறிசேன தலைமையில் கூடிய போதிலும் எந்த இறுதி தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பை பகிஷ்கரிப்பது, ஆதரிப்பது அல்லது எதிராக வாக்களிப்பது என்ற மூன்று நிலைப்பாடுகளில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், நாளைய தினம் நடக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.