மங்களவின் அறிக்கையால் ஏற்பட்டுள்ள கடும் விமர்சனம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

எனக்குத் தெரியாமலேயே ஜெனிவா தீர்மானத்தில் இணை அனுசரணை கையெழுத்து போடப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அறிக்கை வெள்யிட்டிருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர,

ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீசுக்கு கொழும்பில் இருந்து, பிரதமரின் செயலகத்தின் கீழ் உள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவெலவே, இணை அனுசரணை தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட நல்லிணக்கச் செயற்பாடுகளை முழுமையாக ஒருங்கிணைக்கும் நோக்கில், நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகம், 2016ஆம் ஆண்டு அமைச்சரவையினால் உருவாக்கப்பட்டது.

ஜெனிவாவில் உள்ள தூதுவர் அசீசுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் முழுமையாக அறிந்திருந்தார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன,

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.

வெளிவிவகார அமைச்சராக இல்லாத நிலையில் இத்தகையதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை. அமைச்சரின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

Latest Offers