இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரமாட்டேன்! கடும் கோபமடைந்த மைத்திரி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களில் தான் பங்கேற்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார​ சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கிடையிலான பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, மின்சார சபைக்கு எதிராக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பில் பேசிய மைத்திரி,

அரச நிறுவனமொன்று மற்றுமொரு அரச நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகள் அந்த நிறுவனம் சரிவடையும் அதேபோல, நுகர்வோர் பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள் என்றும். இந்நிலையில் இப் பிர​ச்சினைக்குத் தீர்வு காணவேண்டு.

இதேவேளை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகள் தொடர்பில், அமைச்சரவைக் கூட்டத்தின்​ போது, கடுமையான விமர்சனங்களை மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும் இப்பிரச்சினை தீர்க்கப்படும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களின் இனிமேல் நான் பங்கேற்கமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers