இரண்டு முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்த மைத்திரி!

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியல் முன்னணியான ஜனநாயக தேசிய முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துக்கொள்வார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த முன்னணியை உருவாக்கி, மே மாதம் முதலாம் திகதி மிகப் பெரிய சனக் கூட்டத்தை கொழும்புக்கு அழைக்கப் போவதாகவும் புதிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அதன் பின்னர் அறிவிக்கப்படுவார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மில்லனிய கல்பொத்த சந்தியில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றேன். இந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதியுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 15 ஆண்டுகளுக்கு மேலாக அமைச்சராக பதவி வகித்து வருகிறேன். களுத்துறை மாவட்டத்திற்கு பெரிய சேவையை செய்துள்ளேன். 15 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளேன்.

சுகாதார அமைச்சின் மூலம் 4 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். மிகவும் நம்பிக்கையுடன் மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளனர். எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜிதவுக்கு வாக்களிகக் வேண்டாம் என்று பிரசாரம் செய்தனர். எனினும் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தேன்.

நாட்டில் அண்மையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது நான் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டேன். ஜனாதிபதி எனது நண்பராக இருந்தாலும் தவறு செய்யும் போது நட்பை ஒதுக்கி வைத்து விட்டு, நான் போராடுவேன்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி என்னை இரண்டு முறை அழைத்தார். சூழ்ச்சி செய்து பின் வாசல் வழியாக வழங்கப்படும் பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் எனக் கூறினேன்.

சதித்திட்டங்களை தோற்கடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார். எம்முடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துக்கொள்வார்கள்.

ராஜபக்சவினருக்கு எதிரான முகாமை அமைக்க சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொள்வோம்.

தற்போதைய அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும். குறைகள் இருக்கலாம். குறைகள் இல்லாத அரசாங்கங்கள் உலகில் எங்கும் இல்லை.

போரை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் பங்களிப்பு வழங்கினோம். போருக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாக அவரது அரசாங்கத்தில் இருந்து விலகினேன்.

நான் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை என்றால, எனது மகன் சத்துர சேனாரத்ன அதனை செய்து முடிப்பார் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers