சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு மகிந்தவுக்கும் அழைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அந்த கட்சியின் மே தின ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்றத்திற்கும் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொள்வார் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers