வரவு செலவுத்திட்டத்திற்கு மைத்திரி தரப்பின் முடிவு - அதிருப்தியில் மகிந்த தரப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஏப்ரல் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்கக் கூடாது எனவும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளக் கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருப்பதால், வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனை நேரடியாக கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்கவில்லை என்பதுடன் நேற்றிரவே மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஜனாதிபதியின் முடிவை தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த மகிந்த ராஜபக்ச தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது.

Latest Offers