தொழிலாளர் தின கொண்டாட்டம் : இதுவரை கோத்தபாயவுக்கு அழைப்பில்லை

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ​ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த நிகழ்வு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவும், பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தொழிலாளர் தினத்தில் அதிக வெப்பமான வானிலை தொடருமாக இருந்தால் பேரணி நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு கம்பஹா நகரசபை மைதானத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும், அதற்கு சுதந்திர கட்சியின் மே தின கூட்ட ஏற்பாடுகளின் தலைவர் நிமல்சிறிபால டி சில்வா மஹிந்தவுக்கும், ஸ்ரீ லன்கா சுதந்திர கட்சி உறுப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers