போதையிலிருந்து விடுபட்ட நாடொன்றிற்கான சித்திரை உறுதி உரை

Report Print Yathu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைபேறான அபிவிருத்தி என்ற எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற 'போதையிலிருந்து விடுபட்ட நாடு' போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைய இன்று நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முல்லைத்தீவில்,

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று காலை 08-30 மணிக்கு போதைப்பொருளுக்கு எதிரான சித்திரை உறுதியுரை அரச செயலக உத்தியோகத்தர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில்......

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை சர்வமத பிரார்த்தனைகளைத் தொடர்ந்து குறித்த உறுதி மொழி நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் குறித்த உறுதி மொழி நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற அனைத்து உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில்,

கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சித்திரை உறுதி உரை நிகழ்வு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவை பிரதேச செயலாளர் தெளிவு படுத்தியதன் பின்னர் பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதி உரையை எடுத்துக் கொண்டார்கள்.

Latest Offers