போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! சபாநாயகர்

Report Print Steephen Steephen in அரசியல்

போதைப் பொருள் வியாபாரம் மற்றும் கப்பம் பெறும் குற்றங்களுடன் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனை கூறியுள்ளார்.

குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, கடமையை அர்ப்பணிப்புடன் செய்யும் திறமையான அதிகாரிகளை கௌரவிப்பது முக்கியமானது எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக அண்மைய காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இந் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest Offers