மின்சார நெருக்கடிக்கு பின்னணியில் இருக்கும் மர்மம்! நாமல் வெளியிட்ட தகவல்

Report Print Nivetha in அரசியல்

மின்வெட்டுக்குப் பின்னால் யாரும் அறியாத இரகசியம் ஒன்று இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மின்சார நெருக்கடிக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது சந்தேகம் எழுகின்றது.

எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான பணத்தை திரட்டிக் கொள்வதற்காக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறதா என்றும் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றது.

புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் குறித்த சங்கத்தினர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers