அலரிமாளிகைக்குள் அமெரிக்க நிறுவன அலுவலகம்! அம்பலமான ரகசியம்

Report Print Dias Dias in அரசியல்

அலரி மாளிகையில் புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பிரதமர் ரணில் அண்மையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதில் இலங்கையில் காணி அளவீட்டுக்காக 150 அமெரிக்க டொலர்கள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு செலவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காணி அளவீட்டு நடவடிக்கையை எந்த நிறுவனத்திற்கு வழங்குவது என்று தீர்மானிப்பதற்காக உப குழுவில் நான்கு அமெரிக்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது வெள்ளையர்களின் நாடா? இது பலருக்கு தெரியாது, இது அலரிமாளிகைக்குள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை சாகல ரத்நாயக்க அறிவார் என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.

இதன் போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க , விமல் வீரவன்ச அதனை நிரூபிக்க வில்லை என்றால் உடனே பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

இதேவேளை, இதற்கு பதில் வழங்கும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அலரிமாளிகை இருந்து கடிதம் ஒன்றினை நான் பெற்று உள்ளேன். 2019 பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம் என்னிடம் உள்ளது, சாகல ரத்நாயக்க உடன் பதவி விலக வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

Latest Offers