தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சவால் விடுத்துள்ள அங்கஜன்!

Report Print Murali Murali in அரசியல்

மக்கள் நலன் எதுவும் இல்லாத இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சவால் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தமிழர் விடயத்தில் அரசாங்கம் ஜெனிவாவில் தனது கபடத்தனத்தை காட்டிவிட்டதாக கூட்டமைப்பு கூறிவருகின்றது.

இந்நிலையில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரா? எனினும், கூட்டமைப்பு அவ்வாறு செய்யாது.

அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கும். எவ்வாறாயினும், மக்களின் இறைமைகளை தொடர்ந்தும் அடகுவைத்து தமது நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்கால எமது சந்ததியினரின் வறுமையினையும், கல்வியினையும், பொருளாதாரத்தினையும் அபிவிருத்தி செய்யும் உணர்வுபூர்வமான நோக்கினை கொண்டதாக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers