மைத்திரியின் இந்த மௌனத்திற்கு காரணம் என்ன?

Report Print Murali Murali in அரசியல்

அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவு செலவு திட்டத்திற்கு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு கருத்தையும் முன்வைக்காதது ஏன்னென மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.

அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இவ்வாறு கேளியெழுப்பியுள்ளார்.

அந்த கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி சவால் விடுத்திருந்தார்.

எனினும், தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவு செலவு திட்டத்திற்கு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு கருத்தையும் முன்வைக்காது மௌனம் காத்து வருகின்றார்.

இந்நிலையில், வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிரானது என்பதை நிரூபிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers