சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்! சுதந்திர கட்சியின் கூட்டத்திற்கு டக்ளஸை அழைத்த மைத்திரி?

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், அந்த கூட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமகால கொழும்பு அரசியல் களமென்பது மிகுவும் கொதிநிலையில் இருக்கின்றது.

குறிப்பாக அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை முன்வைத்துள்ள நிலையில், இரண்டு அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீடு நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

இதுவொருபுறம் இருக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் தேசிய அரசாங்கம் குறித்த விடயங்களும் கொழும்பு அரசியலில் பிரதான இடத்தினை பிடித்துள்ளது.

மேலும், பாதாள உலக குழுவினரின் கைது நடவடிக்கைகளும் கொழும்பு அரசியலில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நேற்று இடம்பெற்றிருந்து. இதன் போது முக்கிய பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.

குறிப்பாக வரவு செலவு திட்டம் குறித்த இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், இது குறித்து நேற்றைய கூட்டத்தில் பிரதானமாக பேசப்பட்டுள்ளது. எனினும், முடிவுகள் எதுவும் எடுக்கப்பவில்லை.

அத்துடன், நாட்டில் தற்போது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு குறித்தும் இதன் போது பேசப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டமொன்றுக்கு மாற்று கட்சியின் தலைவர் அழைக்கப்பட்டுள்ளமை தற்போது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை கொண்டு செல்லும் நோக்கிய தனது கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி அழைத்திருக்கலாம் என கொழும்பு அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers