துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு

Report Print Navoj in அரசியல்

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அரச வனப் பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் குடும்பஸ்தரொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் என்ற 25 வதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஈரளக்குளம் ஆவட்டியாவெளி அரச வனப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலத்தில் கட்டுத்துப்பாக்கி ரவை காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.