மாவிலாறு அணை மீட்பு குறித்து இரண்டு நிமிடங்களில் கோதபாய தீர்மானம் எடுத்தார்

Report Print Kamel Kamel in அரசியல்
501Shares

மாவிலாறு அணை மீட்பு குறித்து இரண்டு நிமிட கால இடைவெளியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தீர்மானம் எடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மாவிலாறு அணை மூடப்பட்டதனைத் தொடர்ந்து அதனை மீட்பது தொடர்பில் மொத்தமாக ஏழு நிமிடங்களில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த காலப் பகுதியில் நான் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தேன். மாவிலாறு மூடப்பட்டதனைத் தொடர்ந்து நான் இலங்கை திரும்பினேன்.

நான் விமான நிலையத்தை அடைந்ததும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தேன்.

நான் இது பற்றி கோத்தபாய ராஜபக்சவிடம் வினவினேன் ஆம் உண்மைதான் மாவிலாறு அணை மூடப்பட்டுள்ளது என கூறினார். ஐந்து நிமிடங்களில் அழைப்பு எடுப்பதாகக் கூறி நான் திருகோணமலை கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்டு பேசினேன்.

அதன் பின்னர் மீளவும் கோத்தபாயவிற்கு அழைப்பு எடுத்தேன். அதன் போது இரண்டு நிமிடங்களில் மீள அழைப்பதாக கோத்தபாய கூறினார். மஹிந்த ராஜபக்ச எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து மாவிலாறு அணையை மீட்குமாறு கூறினார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது நான் பாதுகாப்பு அமைச்சு செலவுகள் அதிகம் என்று கூறியிருந்தேன்.

எனினும் இந்த ஆண்டு நான் வரவு செலவுத் திட்டத்தை விமர்சனம் செய்யப் போவதில்லை.

கடந்த காலங்களில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிய ஜெனரல்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

விமானப்படையினருக்கு ஒரேயொரு தாக்குதல் விமானமே உள்ளது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.