ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது. வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும், வரவு செலவு திட்டம் குறித்து இந்த சந்திப்பின் போது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன நாளை காலை தனித்தனியாக கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.