வடக்கு மக்கள் தொடர்பில் மகிந்த அணியின் திடீர் திருப்பம்!!

Report Print Gokulan Gokulan in அரசியல்
179Shares

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பத்து ஆண்டுகளாக இராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள ஆலயங்களை அம்மக்களுக்கு வழிபட இடமளிக்க வேண்டும் என என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மொரகாகந்த நீர்தேக்கத்தின் மூலமாக வடக்குக்கு நீரை கொண்டு சென்றால் வடக்கு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.