வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் வந்தவர்கள் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
எனினும், தான் ஆட்சியில் இருந்த போது வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு அதன் அடிப்படையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.