கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டிலாவது தண்டிக்கப்பட வேண்டும்!

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச செய்த குற்றங்களுக்கு இலங்கை நீதிமன்றங்களில் உரிய தண்டனை வழங்கப்படவில்லை என்றால், வேறு ஒரு நாட்டின் நீதிமன்றத்திலேனும் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அமெரிக்க நீதிமன்றத்தில், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது பாராட்டத்தக்கது.

கோத்தபாய ராஜபக்ச பற்றி உண்மை நிலைமை வெளியில் தெரியவர வேண்டும். இப்படியான நபரின் கைகளில் நாட்டின் ஆட்சி அதிகாரம் சென்றால், நாடு எந்த திசையை நோக்கி செல்லும் என்பதை மறந்து விடக் கூடாது.

அதனை மறந்து போனவர்களுக்கு அதனை மீண்டும் நினைவூட்ட வேண்டும் எனவும் காமினி வியங்கொட குறிப்பிட்டுள்ளார்.