கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.கட்சிக்கு சிக்கல் இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக போட்டியிடுவதால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை என ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை அமெரிக்காவுக்கு சென்று குடியுரிமை பெறுமாறு தற்போதைய அரசாங்கம் கூறவில்லை.

அமெரிக்க குடியுரிமை பெற்றால், வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை பெற முடியாது. அந்த நாட்டில் வழக்கு தொடரப்பட்டால், வழக்கை சந்தித்து, வழக்கில் இருந்து விடுதலையான பின்னரே குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

கோத்தபாய ராஜக்சவை தோற்கடிக்க கூடிய வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இருக்கின்றனர். அதில் எந்த சந்தேகமும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இல்லை எனவும் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.