சிங்கள மொழி மூல பாடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்குமாறு கோரிக்கை

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

சிங்கள மொழி மூல பாடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு உடனடியாக விண்ணப்பம் கோருமாறு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், கிழக்கு மாகாண சிங்கள மொழிமூல பட்டதாரிகளுக்குமிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

சிங்கள மொழி மூல பட்டதாரிகள் தமது பல்வேறு வகையிலான பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், சிங்கள மொழி மூல பாடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரப்படவில்லை என கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.