கோத்தபாய வழக்கு விவகாரம்! பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு ஆவணங்களை வழங்கச் சொன்ன அந்தப் பெண் யார்?

Report Print Steephen Steephen in அரசியல்

உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதுடன் இந்த வழக்கு தொடரப்படுவதற்கு காரணமாக ஆவணங்களை பிரதமர் அலுவலகத்திற்கு வழங்குமாறு முக்கிய பிரமுகரான பெண்ணொருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பெண் விடுத்துள்ள இந்த கோரிக்கை சம்பந்தமாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய உறவினரான இந்த பெண் கோத்தபாய ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புள்ளவர் என்ற காரணத்தினால், ஜனாதிபதிக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு, சித்திரவதைகளுக்கு உள்ளான ரோய் சமாதானம் என்ற தமிழர் சார்பில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

இலங்கை வம்சாவளி கனேடிய தமிழரான ரோயை பயங்கரவாத விசாரணைப் பிரிவு கடந்த 2007 ஆம் ஆண்டு தடுத்து வைத்து, உடல் மற்றும் உள ரீதியாக சித்திரவதை செய்துள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கோத்தபாய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வந்துள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய உறவினரான குறித்த பெண் யார் என்றும் அவர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.