கூட்டமைப்பினால் அசைக்க முடியாத இடத்தில் ரணில் அரசு! மைத்திரியை காப்பாற்ற எடுத்த முடிவு...

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பேசிய அவர்,

வெறும் நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மகிந்த தரப்பினர் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார்கள். இந்த மனக் கசப்புகளுடனே அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் அமர்கின்றோம்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது. ஜனாதிபதியைக் காப்பாற்றவே வரவு செலவுத் திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை என்றார்.