ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதியும் உரிமையும் விக்னேஸ்வரனுக்கு உண்டு! தெற்கில் கருத்து

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் உறுதியான பின்னர் தமது ஜனாதிபதி வேட்பாளர் யாரென தீர்மானிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

ஜனாதிபதித் தேர்தல் உறுதியான பின்னர் தமது ஜனாதிபதி வேட்பாளர் யாரென தீர்மானிப்போம் என்று குறிப்பிட்டார்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமம் காணப்படுகிறது.

ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் வழங்கிய அவர்,

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் தகுதியும் உள்ளது என்றார்.