இலங்கைக்கு யதார்த்தமான ஒத்துழைப்பை வழங்க தயார்! சீனா அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையுடன் யதார்த்தமான ஒத்துழைப்பை பேண எதிர்ப்பார்ப்பதாக சீனா அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தின் மாத்தறை- பெலியத்தை ஆகிய இடங்களுக்கு இடையில் முதலாவது பயணிகள் ரயில் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டமை தொடாபிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி நிதியளித்திருந்தது. சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லூ கங் இந்தக்கருத்தை நேற்று சீனாவில் வைத்து வெளியிட்டுள்ளார்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் இலங்கைக்கு பாரிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers