புத்தாண்டை கொண்டாட முடியாத அவல நிலையில் இலங்கை மக்கள்!

Report Print Kamel Kamel in அரசியல்

மக்கள் உணவுக்கே திண்டாட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் பிழையான பொருளாதாரக் கொள்கையினால் மக்களினால் புத்தாண்டை கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எவ்வாறெனினும் மக்களுக்கு அன்றாடம் உணவு கூட தேடிக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக வரலாற்றில் மிகவும் அதிகளவில் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டாக இந்த ஆண்டு திகழ்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி எதனைக் கூறினாலும் நாடு பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.