உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்ற போதிலும் அதனை எந்த அரசியல் கட்சியும் விரும்பவில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நடத்தப்படும் தேர்தல் முறை சம்பந்தமாக மீண்டும் பிரச்சினை எழும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், ஜனாதிபதி, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்திடம் கருத்து கோருவதில் எந்த பயனும் இல்லை எனவும் ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை உருவாக்க பங்களிப்பு செய்த முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா உட்பட அனைவரும் அந்த அறிக்கையை தோற்கடித்தனர். இது மிகப் பெரிய கேலி.

இதனால், புதிய முறையில் தேர்தலை நடத்த முடியாது. இது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பொறி. தேர்தல் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்தினால், இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.

உயர் நீதிமன்றம் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டால், தொகுதி எல்லைகள் தெரியாமல் தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை நடத்தும் பந்து நாடாளுமன்றத்தின் கைகளிலேயே உள்ளது.

மாகாண தொகுதி எல்லைகள் நிர்ணயிக்கப்படும் அவரை பழைய முறையில் தேர்தலை நடத்தும் சட்டத்தை கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு முடியும்.

எனினும் இதற்கான யோசனையை ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ கொண்டு வரப் போவதில்லை. இவர்கள் எவருக்கும் தேர்தல் அவசியமில்லை. அனைவரும் தேர்தலுக்கு பயம் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers