கோத்தாவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு! நாமல் கூறும் புது கதை

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான எவ்வித அறிவித்தல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எமக்குத் தெரிந்தவரை கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்தவொரு வடிவத்திலான அழைப்பாணையும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளர் ஒருவரும் கோத்தபாய ராஜபக்ச இதுவரை அத்தகைய அறிவிப்புக்களைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவரிடம் வழக்குகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.

எனினும், சித்திரவதைகள் பாதிக்கப்பட்ட கனேடியத் தமிழர் ஒருவரும், லசந்த விக்ரமதுங்கவின் மகளும் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers