கோத்தாவை கண்டு அஞ்சும் சர்வதேசம்! ஜனாதிபதித் தேர்தலுக்கு வித்திடுகின்றாரா?

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச மீதான அரசாங்கத்தின் அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனூடாக கோத்தபாய ராஜபக்ச மேலும் மக்களுக்கு மிக அருகில் சென்றுவிட்டார் என நடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆனால் அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதற்காக இலங்கையில் அவரின் வேட்பு மனுவை நிராகரிக்க முடியாது.

எந்த காரணிகளின் அடிப்படையில் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்பது தேர்தல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைக் கண்டு அரசாங்கத் தரப்பினர் அச்சமடைந்துள்ளனர் என்று நன்றாகத் தெரிகின்றது, ஆனால் கோத்தபாய ராஜபக்சவிற்கு முழு உலகமே பயப்படுகின்றதோ என்ற கேள்வியும் எழுகின்றது.

கோத்தபாயவுக்கு எதிராக இவ்வாறு அமெரிக்காவில் வழக்குத் தாக்கல செய்யப்பட்டுள்ளதன் ஊடாக அவர் இன்னும் மக்களின் அருகில் சென்றுவிட்டார்.

மக்களின் மனதில் அவர் நெருக்கமாக இடம்பிடித்துவிட்டார். எனவே அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராயின் நிச்சயம் வெற்றிபெறுவார்.

அவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. எந்தெந்த காரணங்களுக்காக வேட்பு மனுக்களை நிராகரிக்க முடியும் என தேர்தல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers