என் மீது குற்றம் சுமத்துகின்றார் சீ.வி.விக்னேஷ்வரன்

Report Print Sumi in அரசியல்

சுன்னாகம் நீர் விவகாரத்தை கையில் எடுத்து நான் அரசியல் லாபம் பெற முனைவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் என்மீது குற்றம் சுமத்தியுள்ளார் என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் நேற்று முன்தினம் அரசியலுக்கு வந்தவன் அல்ல என்னுடைய 18ஆவது வயதில் இருந்தே கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இயக்க அரசியலில் இருந்து அரசியலுக்கு வந்தவன்.

எனது அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு அது தெரியும் அதுதான் குறுகிய அரசியல் லாபம் என கருதி விடயங்களை நடத்துவதோ அல்லது கருத்துக்களை கூறுபவன் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers