கோத்தபாயவுக்கு ஆயுள் தண்டனை? சந்திரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் அல்லது குடியுரிமை இரத்துச் செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச செய்த குற்றங்களுக்கு இலங்கையின் நீதிமன்றங்களில் தண்டனை வழங்கப்படவில்லை என்றால், அமெரிக்காவின் நீதிமன்றங்களில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தனகல்லை ரஜமஹா விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.