குடியுரிமையை இரத்து செய்ய அமெரிக்கா செல்ல வேண்டியதில்லை: நாமல்

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அதனை இலங்கையில் இருந்துக்கொண்டே இரத்துச் செய்ய முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய கோத்தபாய ராஜபக்ச தான் விரும்பிய நேரத்தில் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் வழக்கு தொடர ஏதுவான காரணங்கள் இல்லை என்பதால், அமெரி்க்காவில் வழக்கு தொடர முயற்சிப்பதாகவும் இதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் மட்டுமே செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமோ கோத்தபாய ராஜபக்சவோ அது பற்றி எந்த கருத்தை வெளியிடவில்லை. இது இலங்கை அரசாங்கத்தின் வேலையா என்பதை அமெரிக்க அரசாங்கத்திடமே கேட்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers