ரணிலும் மகிந்தவும் இணங்கியும் சம்பந்தன் விவகாரத்தில் மைத்திரி இழுத்தடிப்பு?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 ஆம் திகதி நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்வும் இதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டடது. ஆனால், இந்த நியமனத்துக்கு, ஜனாதிபதியின் அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.

எவ்வாறாயினும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் தொடர்பான பரிந்துரையைச் செய்வதற்காக, அரசியலமைப்பு சபை இந்த மாத இறுதியில் கூடவுள்ள நிலையில் ஜனாதிபதி சம்பந்தனின் நியமிப்பு தொடர்பான முடிவினை அறிவிக்காமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

முன்னதாக அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார்.

இந்நிலையில் சம்பந்தனின் நியமனம் தொடர்பில் அவர் தாமதிப்பது உள்நோக்கம் நிறைந்ததா என தெற்கு அரசியலில் பேசப்படுவதாக தகவலறிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers