தென்னிலங்கை மக்கள் மத்தியில் மீண்டும் ஹீரோவான மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று மாலை ரயிலில் பயணம் செய்து தென்னிலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மாத்தறையில் இருந்து பெலியத்த வரை நிர்மாணிக்கப்பட்ட ரயில் வீதி பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில் வீதியை பார்வையிடும் வகையில் மஹிந்த ராஜபக்ச ரயிலில் பயணித்து கண்கானிப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் மஹிந்த ராஜபக்ச மாத்தறையில் இருந்து பெலியத்த வரை ரயிலில் பயணித்துள்ளார்.

இதன்போது மக்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். இதன்மூலம் அவரின் ஆதவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ சில காலம் எந்தவித பதவியும் இல்லாத நிலையில் காணப்பட்டார்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் மத்தியில் மீண்டும் பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.