கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்வதை தடுக்கும் முயற்சியில்.....

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறப்பதை முறியடிப்பதற்கு சில சக்திகள் அற்பமான முயற்சிகளை மேற்கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஒரு அமெரிக்க குடிமகன் என்ற வகையில், கோத்தபாய ராஜபக்சவுக்கு போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து நல்ல பாதுகாப்புக் கிடைக்கும். ஆனால் அவர், அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டு, இந்த வசதிகளுக்கு விடை கொடுக்கவுள்ளார்.

அவர் அமெரிக்க குடியுரிமையை துறப்பதை முறியடிப்பதற்கு சில சக்திகள் அற்பமான முயற்சிகளை மேற்கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்றுவரும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இப்போது திடீரென வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதானது, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடையது என்றார்.

முன்னதாக அமெரிக்க படையினரை சட்டத்தின் முன் நிறுத்த முற்படும் அனைத்துலக அதிகாரிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப் போவதில்லை. என்று கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers