ஏன் வரவு செலவுத்திட்டத்தில் கலந்து கொள்ளவில்லை! மைத்திரி தரப்பு விளக்கம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூன்று அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு காணப்பட்டது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான மூன்றாவது பேச்சுவார்த்தை எதிர்க்கட்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இப்பேச்சுவாரத்தையில் கலந்துகொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது பேசிய அவர்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்காமல் விலகிக் கொண்டமையின் பிரதிபலன் இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு வெளிப்படும்.

வரவு - செலவு திட்டத்தை வெற்றிக் கொள்ள செய்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் விலகிக் கொள்ளவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூன்று அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு காணப்பட்டது.

இதேவேளை, பல அரசியல் ரீதியான விடயங்களும் ஆராயப்பட வேண்டியிருந்தது. இவ்விடயங்களை கருத்தில் கொண்டு வரவு - செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொண்டோம் என்றார்.

Latest Offers