ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

ஒரு நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுதலும் முக்கியமாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கிடையே காணப்படும் பிரிவினை நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஒருபோதும் பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விமர்சனங்களைப் போன்றே சிறந்த சமூகமொன்றிற்கான கலந்துரையாடல்களும் கருத்தாய்வுகளும் முக்கியமானவையாகும்.

இன்று தனிப்பட்ட பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தமக்கெதிரான கருத்துக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

அதனூடாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கோட்பாடுகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

பல்வேறு அவதூறான கருத்துக்களை தமக்கு எதிராக தெரிவித்துவரும் நிலையிலும் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பெரிதும் மதிக்கின்ற, அவற்றை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் என்ற வகையில் தான் அமைதியாக இருந்தபோதிலும் மாற்றத்தினூடாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அவ்வாறு அமைதியாக இருக்காது என்பதை கடந்த சில தசாப்தங்களாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் அனுபவங்களினூடாக புரிந்துகொள்வது சிரமமானதல்ல.

ஆகையினால் ஊடகங்களின் பொறுப்பாக அமைய வேண்டியது, விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், கலந்துரையாடல்கள் மற்றும் சிறந்த ஒழுக்கமான சமூகத்தை நோக்கிய பயணத்திற்கு பலமாக செயற்படுவதாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers