ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்!!

Report Print Murali Murali in அரசியல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என தான் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோத்தபாய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும். எமக்கும் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.

அந்த வெற்றியில் தான் ஒரு பெறுமதி இருக்கும். ஆகையினால், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என தான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதனிடையே, ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எமது வேட்பாளரை நாம் தெரிவுசெய்து விட்டோம்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் சிறிய மற்றும் சிறுபாண்மை கட்சிகள் அனைவரும் இந்த வேட்பாளருக்கு ஆதரவையும் தெரிவித்துவிட்டோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் பலமான ஒருவரே அவர். அவர் பொது அணியின் சார்பில் களமிறங்கவுள்ளார். நிச்சயமாக வெற்றிபெறும் தூய்மையான வேட்பாளரே அவர். வெகு விரைவில் அவரை அறியப்படுத்துவோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers