மகிந்த – மைத்திரி கூட்டணியில் சிக்கல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையிலான புதிய அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஓரளவு நல்ல நிலைமை காணப்பட்டாலும் சுதந்திரக் கட்சியின் சில கருத்துக்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக்காலம் முடியும் தினம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள கருத்து மட்டுமல்லாது, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதில்லை அந்த கட்சியினர் எடுத்த முடிவு சம்பந்தமாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்தும் போது அது உண்மையானது என்பதை காண்பிக்க வேண்டும் எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியிடவில்லை.

புதிய அரசியல் கூட்டணியை ஏற்படுத்தும் இந்த கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.