பேச்சுவார்த்தைக்கு ஜீ.எல்.பீரிஸ் தடை

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்காலத்தில் நடத்தப்பட உள்ள எந்த தேர்தலிலும் விரிவான கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமரவீர, எதிர்வரும் 10 ஆம் திகதியும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால், அதில் எந்த தோல்வியும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கூட்டணியாக போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்.

இந்த பேச்சுவார்த்தைக்கு ஜீ.எல்.பீரிஸ் கருத்து தடையாக இருந்தாலும் பொறுமையாக முன்னோக்கி செல்வதாகவும் இணைந்தால் வெற்றி பெற முடியும் எனவும் இல்லை என்றால் தோல்வி நிச்சயம் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.