சுதந்திரக் கட்சியை எந்த கட்சியிடமும் அடகு வைக்க தயாரில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து விரிவான கூட்டணியை அமைக்கும் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளங்களை பாதுகாக்க முயற்சிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் அடகுவைக்க எவரும் தயாரில்லை. ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் கடந்தகாலத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை மறக்க முடியாது.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அதன் அடையாளங்களை பாதுகாத்து செயற்படுவோம். கட்சியை எந்த கட்சியிடமும் அடைமானம் வைக்க தயாரில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.