ஈழ தமிழர்களின் நிலை குறித்து பிரான்ஸ் பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

Report Print Dias Dias in அரசியல்

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள, போர் முடிந்து 10 ஆண்டுகளில் ஈழ தமிழர்களின் நிலை என்ற கருத்தரங்கிற்கு தமிழர் விவகாரங்களுக்கான பாராளுமன்ற உப குழுவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பாராளுமன்றத்தின் தமிழர் குழுக்களுக்கான தலைவர் Marie George Buffet தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 12ம் திகதி பிரான்ஸ் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, பொறுப்பு கூறல், நிலைமாறு கால நீதி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக தனது கருத்துக்களை முன் வைக்கவுள்ளதாக மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் நவனீதன் தெரிவித்துள்ளார்.